ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:03 IST)

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுனர், இது புதிய வரலாறு: சிபி ராதாகிருஷ்ணன்

Radhakrishnan
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக இருப்பது புதிய வரலாறு என ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிபி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் இல கணேசன் ஆகிய இருவரும் ஏற்கனவே ஆளுநராக இருக்கும் நிலையில் இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
 
தனக்கு ஆளுநர் பதவி கிடைத்தது குறித்து சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தபோது இது எனக்கு கிடைத்த பெருமையாக நான் நினைக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமையாக நினைக்கின்றேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநர் பதவியில் இருப்பது புதிய வரலாறு என்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva