1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Covis cases in pondy increase inspite of lockdown

தொடரும் ஊரடங்கு, அதிகரிக்கும் தொற்று: புதிச்சேரி நிலவரம்!

தொடரும் ஊரடங்கு
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,23,802 ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் போல புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பட்டுள்ளன. அதோடு, புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15 வரை நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்தது.
 
இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,23,802ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 837 பேர் கொரோனா சிகிச்சை பெறும் நிலையில் 1,21,150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
20 ரூபாய்க்கு விற்ற தக்காளி வெறும் 6 ரூபாய்! – கோயம்பேடு மார்க்கெட்டில் விலை சரிவு!