வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2024 (14:49 IST)

கருணாநிதி குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு..!

Seeman
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர், கரூர் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சீமான் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Edited by Mahendran