வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (12:39 IST)

சல்லி சல்லியாய் நொறுங்கும் நாம் தமிழர் கட்சி: மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்..!

"சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே சில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விலகிய நிலையில், தற்போது மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியதை அடுத்து, கட்சி சல்லி சல்லியாய் நொறுங்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அறிவித்துள்ளார். 'கட்சியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, என்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. கட்சியில் இருக்க விருப்பமிருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள்,' என்று சீமான் கூறியது, தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த 9 ஆண்டுகளாக நான் முடிந்தவரை அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடித்தேன் என்றும், எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தை இதுவரை சீமான் வழங்கவில்லை என்றும், அதனால் விலகுவதாக சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்."


Edited by Mahendran