1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court order about rss rally

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

court
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தமிழகத்தின் பல பகுதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த இருந்த நிலையில் அந்த ஊர்வலத்துக்கு தமிழக அரசின் காவல்துறை சமீபத்தில் தடை விதித்தது
 
இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்திற்கு சென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆர்எஸ்எஸ் பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விளையாட்டாக பேசினேன்: ‘ஓசி’ சர்ச்சை குறித்து அமைச்சர் பொன்முடி!