1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:54 IST)

தொடர் தோல்வி… சம்பளத்தைக் குறைத்த மற்றொரு பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தனது சம்பளத்தைக் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் விக்கி டோனர், அந்தாதூன், ஆர்ட்டிகிள் 15 என அடுத்தடுத்து வரிசையாக வித்தியாசமான கதைக்களனை தேர்வு செய்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானவர் ஆயுஷ்மான் குர்ரானா. இதனால் அவரின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது.

ஆனால் சமீபகாலமாக பாலிவுட் படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில் இவரின் சில படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன. இதையடுத்து 25 கோடியாக இருந்த இவரின் சம்பளத்தை இப்போது 15 கோடியாக குறைத்துள்ளாராம். ஏற்கனவே அக்‌ஷய் குமார் இதுபோல சம்பளத்தைக் குறைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.