1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (07:48 IST)

கேரளாவுக்கு ரூ.267.35 கோடி: அவசரகால நிதியாக கொடுத்தது மத்திய அரசு!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து அம்மாநிலத்திற்கு அவசரகால நிதியாக ரூ.267.35 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது 
 
கேரளாவில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அதிகாரிகள் சென்றனர். கேரள ஆளுநராக மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோர்களை சந்தித்து மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார் 
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் கேரளாவுக்கு ரூ.267.35 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க இந்த பணம் போதுமானதாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது அடுத்து கேரளா அரசு தனது நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது