1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (12:24 IST)

பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி-கல்லூரி மாணவி இரண்டு பேரும் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி!

மயிலாடுதுறை பாலக்கரை விஜித்ராயர் அக்ரஹாரம் சாலையில் பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது காதல் ஜோடி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி. 
 
சிதம்பரத்தைச் சேர்ந்த சிந்துஜா 22 மயிலாடுதுறை டவுண்டேஷன் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் 24 ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்கள் மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போதே சிந்துஜா தன் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார் அந்த நெருப்பு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காதலன் மீதும் பற்றியது இருவரும் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. 
 
வேறொரு பெண்ணுடன் பேசியது சம்பந்தமான பிரச்சனையில் சிந்துஜா தற்கொலைக்கு  முயற்சி செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது