தமிழக நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் கனவு இல்லறத்தை நனவாக்கும் வகையில், வெறும் 10,000 ரூபாய் முன்பதிவு கட்டணத்தில் கடற்கரை திருமணங்களை நடத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை திரைப்பிரபலங்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த இத்தகைய திருமணங்கள், இனி சாதாரண மக்களுக்கும் எட்டும் தூரத்தில் அமையும். சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை, குறிப்பாக மாமல்லபுரம் பகுதிகளில் இந்த திட்டம்...