1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (13:12 IST)

உல்லாசமாக இருந்துவிட்டு கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன்! – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த நபர் அவர் திருமணம் செய்து கொள்ள சொன்னதால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவருடன் பள்ளிக்காலத்தில் படித்த அனிலா என்ற பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அனிலாவும், பிஜூவும் சந்தித்துக் கொண்ட நிலையில் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளனர். இது அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
சமீபத்த்ல் பையனூரை சேர்ந்த பிஜூவின் நண்பரான ஜோசப் வெளியூருக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார். அதனால் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு பிஜூவிடம் சொல்லி சென்றுள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட பிஜூ, அனிலாவை ஜோசப் வீட்டிற்கு வர செய்துள்ளார்.

அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்பின்னர் தான் தன் கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக சொன்ன அனிலா, பிஜூவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பிஜூ மறுத்துள்ளார். இந்த சண்டையில் ஆத்திரமடைந்த பிஜூ அங்கேயே மனிலாவை கழுத்தை நெறித்துக் கொன்று போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

வெகுநேரமாக பிஜூ போனை எடுக்காததால் ஜோசப் பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டு வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க சொல்ல, அங்கு பெண் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி பிஜூவை தேடி அவரது ஊருக்கு சென்றபோது அவர் மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K