சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை.. அடையாளம் காணமுடியாததால் சிக்கல்..!
நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்தப் பெண் யார் என்பதை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பிணத்தை கைப்பற்றி காவல் துறையினர் அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்த பெண்ணின் கையில் செல்போன் அல்லது வேறு விவரங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர் யார் என்கிற விவரத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது இறப்பு விவரங்களை கண்டறிவதும் சவாலாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ரயில் நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வரும் நிலையில் இறந்து போன பெண் எதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தார் என்பது குறித்து விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் சிசிடிவி கேமராவும் இல்லாமல் இருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் அந்த பெண் உண்மையாகவே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அழைத்து வந்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Mahendran