ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:29 IST)

பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை விவகாரம்..வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கணவன் பிரவீன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் மனைவி ஷர்மிளா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை  பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி ஷர்மிளா உயிரிழந்தார்.
 
இந்நிலையில் ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷர்மிளா தற்கொலைக்கு பெற்றோர், சகோதரர்களே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில் தற்போது  ஷர்மிளா தற்கொலை விவகாரம் தொடர்பாக  வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.
 
முன்னதாக சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டார். பிரவீன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran