வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (12:00 IST)

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை.. ஆபாச புகைப்படத்தால் அவமானம்..!

loan
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞரை ஆபாச புகைப்படம் சித்தரித்து அவருடைய உறவினருக்கு அனுப்பியதால் அவமானம் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி கொடுத்து ஏமாறுகின்றனர் என்றும் அது மட்டும் இன்றி கடனை கட்டவில்லை என்றால் அவர்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடன் செயலி நிர்வாகத்தினர் அனுப்பி மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து ஏராளமான புகார்கள் காவல்துறைக்கு வந்திருக்கும் நிலையில் சென்னை சேர்ந்த கோபிநாத் என்பவர் ஆன்லைன் கடன் செயலியில் வாங்கிய நிலையில் கடனை முழுவதுமாக கட்டிய பின்னரும் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது தொலைபேசியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடன் செயலை நிறுவனத்தினர் அனுப்பியதாக தெரிகிறது. 
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதாகவும் வாட்ஸ் அப்பில் இது குறித்த முழு விவரத்தையும் அவர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் கொடுப்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 
 
Edited by Mahendran