எண்ணெய் கப்பலை தடுத்தால் 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்!. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!...
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த 28-ம் தேதி முதலே தாக்குதலை நடத்தி வருகிறது.. அந்த தாக்குதலில் ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். மேலும், இதுவரை ஈரானில் 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள நாடுகளின் மீதும் இஸ்ரேல் நாட்டின் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.. இந்த போரால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் உருவாகியிருக்கிறது..
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செல்லும் முக்கிய கடல்வழி பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது.. மேலும் இந்த வழியாக கப்பல் போக்குவரத்திற்கும் ஈரான் தடை விதித்திருக்கிறது.. மீறி கப்பல் வந்தால் தாக்குவோம் எனவும் ஈரான் எச்சரித்திருக்கிறது. சில கப்பல்கள் மீது அப்படி தாக்குதலும் நடத்தியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் ஹார்மூச் ஜலசந்தி வழியாகத்தான் செல்லும்., தற்போது ஈரான் பிரச்சனை செய்து வருவதால் கச்சா எண்ணெய் வினியோகம் தடைப்பட்டிருக்கிறது..
இந்நிலையில், ஹார்மூஸ் ஜலச்சந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தினாலோ, தாக்கினாலோ அந்த நாட்டின் மீது தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு அதிகமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.
மேலும், ஈரானால் மீண்டும் கட்டமைக்க முடியாதபடி துல்லியமாக தாக்கி அளிப்போம்.. மரணம், நெருப்பு மற்றும் கோபம் அவர்களை ஆட்சி செய்யும் நிலை ஏற்படும்.. ஆனால் இது நடத்தக்கூடாது என்று நான் விரும்புகிறேன் எனவும் அவர் மிரட்டியிருக்கிறார்..