தொடர்புடைய செய்திகள்
- மரணத்திலும் அரசியல் செய்யும் எதிர்கட்சிகள்..! திமுக பெண் எம்.பி. காட்டம்..!!
- மௌனம் கலைத்த நடிகர் சூர்யா..! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு கண்டனம்..!!
- கள்ளக்குறிச்சி விவகாரம்.! சட்டசபையில் கடும் அமளி..! பாமக - பாஜக வெளிநடப்பு.!!
- பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்..! கள்ளக்குறிச்சிக்கு செல்லுங்கள்..!! நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
- கள்ளக்குறிச்சி விவகாரம்..! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!!
கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக, பாஜக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன. ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மருத்துவர். இருப்பினும் தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
