1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Counseling meeting canceled

ஆலோசனை கூட்டம் ரத்து!

Counseling meeting canceled
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது  குறித்த ஆலோசனை கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றது.

இந்நிலையில் தமி்ழகத்தில் நாள்தோறும் குறைந்த அளவு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எனவே, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துவதாக இருந்த நிலையில், இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிகிறது. ஏற்கனவே கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு ஆலோசனை நடைபெற்று, நேற்றி முன் பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. தியேட்டர்களைத் திறக்க வேண்டுமென திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கூட்டம் நாளை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
About Writer
sinoj