1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona Warning Follow 22 Rules

கொரோனா எச்சரிக்கை: 22 விதிகளை பின்பற்றுங்கள்.. போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!!

கொரோனா எச்சரிக்கை: 22 விதிகளை பின்பற்றுங்கள்..  போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!! - Corona Warning Follow 22 Rules
கொரோனா எச்சரிக்கை: 22 விதிகளை பின்பற்றுங்கள்.. போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!!
டிஜிபி திரிபாதி, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களை காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, காவல் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய 22 விதிமுறைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், காவல்நிலையத்துக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் மனுதாரர்களை முதலில் உடல் வெப்ப சோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் நுழையும் இடத்தில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பார்வையாளர்களை நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில், அனுமதிக்க வேண்டும், அவர்களை குளிர்சாதன வசதிகொண்ட இடத்தில் அனுமதிக்கக் கூடாது. கேண்டீனில் மதிய நேரத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதுடன், அங்கு இடத்தில் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சி மையங்கள், பொதுவிளையாட்டுக் கூடங்கள் ஆகிய பகுதிகளை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பாதிப்பு !