செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (14:37 IST)

இன்று மாலை முதல் தேநீர் கடைகளை மூட உத்தரவு !

இன்று மாலை முதல் தேநீர் கடைகளை மூட உத்தரவு !

நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஊரடங்கு உத்தரவை கடைப்பிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பைக்கில் ஆளில்லாத ரோட்டில் ரேஸ் செல்வதும் ,கடைகளில் 5 பேருக்கு மேல் நிற்பது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து தேநீர் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ரேஷன் காய்கறிகளை மட்டுமே வீட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.