1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 25 மார்ச் 2020 (16:14 IST)

தமிழகத்தில் 8வது கொரோனா ஆய்வகம்! விஜயபாஸ்கர் டுவீட்

தமிழகத்தில் 8வது கொரோனா ஆய்வகம்! விஜயபாஸ்கர் டுவீட்

நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த கொரோனா பாதிப்பில்இருந்து மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஊரடங்கு உத்தரவை கடைப்பிக்க வேண்டும்;சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் படுவேகமாகப் பரவி வருகிறது. இதற்கான 8 ஆய்வகம் தமிழ்நாட்டில்  அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் , கோவிட் 19 என்ற கொரோனா வைரஸுக்கு 8 வது ஆய்வகமாக  மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு ஓப்புதழ் அளித்துள்ளது.  இந்த கொரோனா ஆய்வகத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் மாதிரி சோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.