திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:23 IST)

கொரோனா பரிசோதனை கட்டணம் பாதிக்கும் மேல் குறைப்பு: தமிழக அரசு ஆணை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது என்பதும் இதனை அடுத்து மார்ச் மாதம் முதல் ஏழு மாதங்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே
 
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதும், தற்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
தனியார் ஆய்வகங்களில் கொரனோ பரிசோதனைக்காக ரூபாய் 3000 கட்டணம் நியமனம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கட்டணம் வெகுவாகக் குறைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 3000 இருந்து வருவதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின
 
இதனை அடுத்து தற்போது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கட்டணம் ரூபாய் 3000ல் இருந்து 1200 ஆக குறைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதாவது பாதிக்குமேல் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டு அட்டை வைத்திருந்தால் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூபாய் 800 மட்டுமே என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது