திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (20:38 IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவித்த தமிழக அரசு

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும்  ஜனவரி 14 ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரியப் பண்டியையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.2500 வீதம் வழங்குவதாகவும் இதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று அரசு கூறியதுபோல் வழங்கி வருகிறது.
12
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை மின்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசுப் பணியாளர்களுக்கும் ரூ.1000  முதல் ரூ.3000 வரை போனஸ் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அதேபோல்ம்  ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.