செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (14:50 IST)

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை!!

புத்தாண்டு தினத்தைமுன்னிட்டு நேற்று தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் மட்டும் இந்தக் கொரொனா காலத்திலும்கூட ரூ.159 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா கால ஊரடங்கு வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள சில தளர்வுகளுடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறக்க உத்தர விட்டது.

எனவே இன்று புத்தாண்டு தினத்தைமுன்னிட்டு நேற்று தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் அமோகமாக விற்பனையாகியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தக் கொரொனா காலத்திலும்கூட ரூ.159 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை மண்டலத்தில் ரு.48 .75 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.28.40 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ,27.30 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 26.49 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிறது.