1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (18:48 IST)

கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9 மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் 68 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் கொரோனா வைரஸ் தொற்று மட்டுமின்றி புதிய வைரஸ் காய்ச்சலும் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran