திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (17:10 IST)

கோவிலுக்கு வராதே என்பது... பக்தியா பகுத்தறிவா? ஆ ராசா டிவிட்!

திமுக எம்.பி ஆ.ராசா தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து சர்ச்சையான வகையில் பதிவிட்டுள்ளார்.
 
உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும், கொரோனா தொற்றுக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளார். 
 
கொரோனா பீதியால் மக்கள் ப்லர் கூடும் இடங்கள் பெரும்பாலானயை மூடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவில்களுக்கு வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இதை சுட்டிக்காட்டும் பொருட்டு திமுக எம்.பி ஆ.ராசா தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?