செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (15:48 IST)

கொரோனா குணமாக கோமியம் பருகுவீர்.. அடப்பாவிகளா! இது வேறயா! – வைரலாகும் வீடியோ!

டெல்லியில் கொரோனா பரவாமல் தடுக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்து கோமியம் குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க இரண்டு ஆண்டு காலம் ஆகலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் பல இடங்களில் சில நிரூபிக்கப்படாத மருத்துவமுறைகளை சிலர் கொரோனாவுக்கு மருந்து என எந்த வித சான்றும் இல்லாமல் பரப்பி வருகின்றனர். அதுபோல சில அமைப்புகள் எந்த நோய் வந்தாலும் கோமியத்தை மருந்து என சமூக வலைதளங்களில் பரப்புவதும் நடந்து வருகிறது.

அகில பாரத இந்து மகாசபா என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர் ஒன்று இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் பூம்பூம் தாகூர் கௌமூத்ரா எனப்படும் கோமியத்தை பருகி கொரோனாவை தடுக்கலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த போஸ்டரில் உள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது அந்த நிகழ்வில் பலர் கோமியம் குடிக்கும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.