1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 14 மார்ச் 2020 (15:49 IST)

கொரோன வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு !

கொரோன வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு !

கொரோனா வைரஸுக்கு எதிராக உறுதியுடன் கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் என கூறியுள்ளார். 
 
உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ( ஆர் எம் எஸ் மருத்துவமனையில் ) ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.
 
இந்தியாவில்  நேற்று மாலை வரை கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது, கொரொனா தாக்கத்தை பேரிடராக கருதி தேவையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இது குறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4  லட்சம் நிதியுதவி வழங்கும் வகையில் அறிவித்துள்ளது.