செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (21:55 IST)

நாளை முதல் நீட்டிக்கப்படும் கொரொனா கட்டுப்பாடுகள் ?

தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள்  நாளையுடன்  நிறையவடைய உள்ள நிலையில்,  நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகிறது.

அதில்,   சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு  தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தொடரும்.

பேருந்துகள், பொதுப்போக்குவரத்து, புற நகர் ரயில் நிலையங்களில் 100% பயணிகளுக்கு தடுப்பூசி சான்று தேவையில்லை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை  நாளை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் வழிபாட்டுத்தளங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.