புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (20:30 IST)

தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

தமிழகத்தில் சில நாட்களாகக் கொரொனா தொற்றுக் குறைந்துள்ளது. இந் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் வரும் ஜன்வரி 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் இதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்ண்டுள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழக அரசு இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதில்,  தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகள் செயல்படத் அனுமதியில்லை. அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நடத்தும் கலை விழாக்களுக்கு அனுமதி இல்லை.

சினிமா தியேட்டர்கள் சுமார் 50% பார்வையாளர்களுடம் செயல்பட அனுமதி எனவும், திருமணம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும், இறப்பு   நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதி எனவும்,  உணவகம், பேக்கரிகள், வாடிக்கையாளர்கள் மட்டும் 50 % பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சலூங்கள், கேளிக்கைபூங்காக்கள், அழகு நிலையங்களில் சுமார் 50% பேருக்கு மட்டும் அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.