1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona for 46 students in Coimbatore

கோவையில் 46 மாணவர்களுக்கு கொரொனா!

கோவை
கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் கடந்த 2 நாட்களில் 46 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கேரள மாநிலத்தில் இருந்து வந்த 4 மாணவர்களில் இருந்துதான் பிற மாணவர்களுக்குக் கொரொனா தொற்றுப் பரவியதாகவும் கூறப்படுகிறாது.

மேலும், கோவை மாவட்டத்தில்  கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: கோவையில் மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் பால், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை இயங்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்