செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (11:57 IST)

மாமியாருக்கு கொரோனா: கிணற்றில் விழுந்து மருமகள் தற்கொலை!

மாமியாருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடைய மருமகள் அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
ராசிபுரத்தில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தனது கணவருக்கும், தனக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது மருமகள் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா என்பது ஒரு தொற்று நோய் தான் என்றாலும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அளவிற்கு இது அபாயகரமானது இல்லை என்றும் கொரோனாவில் இருந்து ஏராளமானோர் மீண்டு எழுந்து உள்ளார்கள் என்றும் எனவே கொரோனா குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்