நள்ளிரவில் ஓட்டைப் பிரித்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை –போலிஸார் விசாரணை!

Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:38 IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி கிராமத்தில் உள்ள 68 வயது மூதாட்டி ஒருவரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி என்ற பகுதிக்கு அருகே கோரி காலணி என்ற பகுதி உள்ளது. அங்கு கணவரை இழந்த தனியாக வாழும் 68 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் குதித்து அந்த மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தனக்கு நடந்த கொடுமை பற்றி மூதாட்டி பலரிடமும் சொல்ல, அவர்கள் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :