இந்த பெயரால் படாதபாடு படுகிறேன்… இங்கிலாந்து பெண்மணி அதிருப்தி!

Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:39 IST)

கொரோனா என்ற பெயர் வைத்திருப்பதால் தான் இப்போது பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக இங்கிலாந்து பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரின் பெயர் ஜிம்மி கொரோனா. இந்நிலையில் தற்போதைய கொரோனா அச்சுறுத்தலால் அவர் பெயரால் அவர் சில இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக சொல்லியுள்ளார்.

இது சம்மந்தமாக ’யாராவது தனது பெயரைக் கேட்கும் போது ஜிம்மி கொரோனா என்று சொன்னால் தான் கேலி செய்வதாகவோ அல்லது விளையாடுவதாகவோ எண்ணுகிறார்கள். அதன் பிறகு நான் எனது அடையாள அட்டையைக் காட்டினால்தான் ஒத்துக் கொள்கிறார்கள். மேலும் தெரிந்தவர்கள் அழைக்கும் போது கொரோனா என்றோ அல்லது வைரஸ் என்றோ சொல்லி கேலி செய்கிறார்கள்’ என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :