அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம்! உத்தரபிரதேசத்தில் சர்ச்சை!

Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:38 IST)

உத்தர பிரதேசக் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி
. இவர் அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது பற்றிய செய்திகள் வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :