கொரோனாவால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் பிம்ஸ் நோய்???
கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் 4,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6,61,264 பேராக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 5,165 பேர் குணமடைந்துள்ளதால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,07,203 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,83,251 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
எனவே, இது குறித்த பயத்தை போக்கியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அவர் கூறியதாவது, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல கொரோனா தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என கூறினார்.
மேலும், கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அது வெறும் வதந்தியே என தெளிவுபடுத்தியுள்ளார்.