3.70 கோடி பேருக்கு கொரோனா, 10.72 லட்ச மரணம்: உலக நிலவரம்!!
உலகளவில் 3.70 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடியைத் தாண்டியுள்ளது. அதே சம்யம் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2.78 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்க்ளில் 68,400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 10.72 லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.