70,00,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு: இந்திய நிலவரம்
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 69 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 69,79,423 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 59,88,823 பேர் குணமடைந்துள்ளனர். அதோடு 1,07,416 பேர் உயிரிழந்துள்ளனர்.