தொடர்புடைய செய்திகள்
- ரஷ்ய கவச வாகனங்களை கைப்பற்றிய உக்ரைன்!
- மெல்ல உயரத் தொடங்கும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா மோதல்
- சேவையை நிறுத்தினா சொத்துகளை கைப்பற்றுவோம்! – பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை!
- 45.32 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
சீனாவில் மீண்டும் கொரோனா தாண்டவம்! – ஒரே நாளில் 255 பேர் பலி!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது பல லட்சம் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் முழு முடக்கத்தால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தன.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல நாடுகளில் கொரோனா குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில தினங்களில் வெகுவாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சீனாவின் வடகிழக்கு நகரங்களில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 255 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,194 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
