ஒருசிலர் சோபாவுக்காக சென்றுவிட்டனர்.. ஆனால்.. திருமண விழாவில் மீண்டும் அரசியல் பேசிய உதயநிதி...
திமுகவை விட்டுவிட்டு பதவி ஆசைக்காக ஒரு சிலர் சோபா வந்த உடனே சென்றுவிட்டனர் என்றும், ஆனால் கட்சியின் கொள்கைக்காக இப்போதும் கோடிக்கணக்கான உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும் திருமண விழா ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நடப்பது ஒரு அரசியல் பேரிடர் என்று விமர்சித்த அவர், இஸ்லாமிய மக்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவை யார் நினைத்தாலும், என்ன சதி செய்தாலும் பிரிக்க முடியாது என மிக உறுதியாகக் குறிப்பிட்டார்.
சமீபகாலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்ளும் திருமண விழாக்களில் தொடர்ந்து அரசியல் பேசி வருவது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "விசேஷ வீடுகளுக்கு வந்துவிட்டு ஏன் எப்போதும் அரசியல் பேசுகிறார்கள்?" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையிலும், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு திருமண மேடையில் காரசாரமாக அரசியல் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்காகக் கட்சி மாறுபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், கொள்கைப்பிடிப்புள்ள தொண்டர்களே கட்சியின் பலம் என்பதை அவர் இந்த நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
Edited by Siva
