வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anadakumar
Last Modified: வியாழன், 14 மே 2020 (23:23 IST)

கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி...

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வசித்து வந்த பகுதிகளில் முற்றிலும் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டது – நகராட்சி நிர்வாகம் அதிரடி.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றினை, சுகாதாரத்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்ததையடுத்து, அவர் வசித்து வந்த பகுதியான, தாந்தோன்றிமலை பகுதியை அடுத்த திருமலைநகர் மற்றும் என்.ஜி.ஒ ஆகிய காலனிகள் ஒரே தெருவில் இருப்பதால் இரு தெருக்களும் முற்றிலும் கரூர் நகராட்சியின் சார்பில் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும், ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு தீவிர பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே, 54 நபர்கள் நேற்றுடன் இருந்த நிலையில் இந்த செவிலியரையும் சேர்த்து 55 நபர்களாக கொரோனா பாதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேற்று வரையும், இன்றும் சேர்த்து 11 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் 44 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே 10 நபர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த செவிலியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது 11 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேலும், ஏற்கனவே சிகிச்சை அளித்து வந்த கொரோனா வார்டிலேயே தற்போது அவருக்கும் சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.