சச்சின் குறித்த ரகசியத்தை வெளியிட்ட பாகிஸ்தான் வீரர்

sachin
sinoj| Last Updated: வியாழன், 14 மே 2020 (20:49 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரைப் பற்றி முன்னாள் பாகிஸ்தான வீரரும் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் புகழ்ந்து கூறியுள்ளார்.

சச்சின் குறித்து அவர் கூறியுள்ளதாவது :

சச்சின் டெண்டுல்கள் தனித்தன்மை உடையவர். நான் ஸ்டெம்புக்கு பின் நின்று எது சொன்னாலும் அவரது சிரிப்பு மட்டுமே பதிலாக இருக்கும்.
ஆனால் மற்ற வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை அனைவருக்கும் பிடிக்கக் காரணம், அவர் சதம் அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார். மைதானத்தில் எப்போதும் அவர் நடந்து கொள்ளும்விதம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.




இதில் மேலும் படிக்கவும் :