திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 14 மே 2020 (21:02 IST)

மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மாணவர் கைது !

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஆத்தூர் அருகே உள்ள புங்கபாடி கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவர் ஒருவர், ஆத்தூர் அருகே உள்ள புங்கபாடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் 13 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களாக மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்படவே  அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதன்படி புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீஸார் மாணவியிடம் விசாரித்தனர்., அதனடிப்படையில்,  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் ஹரிஹரன் மற்றும் சுபாஷ் என்ற பள்ளி மாணவர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹரிஹரனை கைது செய்துள்ள போலீஸார் சுபாஷை தேடி வருகின்றனர்.