1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. corona affected in chennai increases gradually

கொரோனா வளர்ச்சி மையமான சென்னை?

Chennai
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,224 பேருக்கு கொரோனா. 
 
நேற்று தமிழகத்தில் 1286 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1286 பேர்களில் சென்னையில் 1012 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,597ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 2,029, தண்டையார்பேட்டையில் 2,093, தேனாம்பேட்டையில் 2,014, அண்ணா நகரில் 1,525, அடையாறில் 1,007, வளசரவாக்கத்தில் 939 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சின்ன பசங்களை சேத்துக்கிட்டா பயந்துடுவோமா? – தொடர்ந்து சீண்டும் சீனா!