1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (09:00 IST)

திருப்பரங்குன்றத்தில் தாராளமாக நடமாடும் குக்கர்: தினகரன் ஆட்டம் ஆரம்பமா?

ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் டோக்கன் கொடுத்துதான் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் என்று திவாகரன் குற்றஞ்சாட்டிய நிலையில் தினகரனின் குக்கர் ஆட்டம் திருப்பரங்குன்றத்திலும் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது
 
திருப்பரங்குன்றம் பெண்கள் புதிய குக்கருடன் சாலையில் நடந்து போகும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் இந்த குக்கர்கள் தினகரன் கட்சியினர்களால் வழங்கப்பட்டு இருக்கலாம் என டுவிட்டர் பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
ஆர்.கே.நகர் போன்றே திருப்பரங்குன்றத்திலும் திமுக, அதிமுக என இரு கட்சிகளையும் தோற்கடித்து வெற்றி பெறுவோம் என தினகரன் நேற்றுதான் பேட்டியளித்தார். அதற்குள் அவர் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டதாக கருதப்படுகிறது
 
திருப்பரங்குன்றத்தில் தினகரனின் வேட்பாளர் வெற்றி பெற்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பெரும் பின்னடைவு என்றே அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக அழகிரி கோட்டை என்று கருதப்படும் திருப்பரங்குன்றத்தில் திமுகவின் வெற்றி அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.