தொடர்புடைய செய்திகள்
- பேரறிவாளன் ஜெயில்ல இருக்கதே என்னாலதான் தெரிஞ்சது! – சீமான் பேச்சால் சர்ச்சை!
- கிலோ ரூ.100 ஐ எட்டிய தக்காளி விலை..! – விலை குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு!
- சாதிக்காயின் அற்புத குணங்கள்
- இலங்கை நெருக்கடி: தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன
- போலி டாக்டர் மருத்துவமனைக்கு சீல்....மாவட்ட இணை இயக்குனர் நடவடிக்கை
பேரறிவாளன் விடுதலை; வாயில் வெள்ளைத்துணியுடன் காங்கிரஸ் போராட்டம்!
ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் தமிழகம் முழுவதும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி, விடுதலை செய்யப்பட்டாலும் செய்த குற்றம் செய்ததுதான் என கருத்து தெரிவித்துள்ளதுடன், இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வாயை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள நேரு சிலை முன்பாகவும் காங்கிரஸார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
