ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன?.. காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் வாக்குமூலம்!...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீது எழுந்துள்ள புகார் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளது. அதோடு, கடந்த திமுக ஆட்சியில் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மகேஷ் குமார், ராஜலட்சுமி, யாஷ்மின் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது..
ஒருபக்கம், தேனாம்பேட்டை பங்களாவில் வீரமணி நிர்வாண கோலத்தில் ஒரு சிறுமியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், 2024ம் வருடம் வீரமணி மீது காவல்நிலையத்தில் ஆதாரத்துடன் புகாரளித்த காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.
2024-ம் வரும் நவம்பரில் உதவி ஆணையர் கண்ணன் என்பவரிடம் வீர்மணி பற்றி புகார் கொடுத்தேன். வீரமணி மற்றும் சாந்தி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே புகார் அளித்தேன். புகாரளித்த சில நாட்களில் வாட்ஸ் அப் மூலமாக இன்ஸ்பெக்டர் மகேஷ் என்னை தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையரையும் சந்தித்து பேசினேன்
நான் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் 2025-ம் ஆண்டு புகார் வந்ததாக போலீஸ் கூறுகிறது. நான் சாந்தியை சந்தித்தபோது வீரமணிக்கும் பணத்தகராறு இருப்பதாகவும், அது தொடர்பாக தன்னை ஜான் பாண்டியன் மிரட்டுவதாகவும் சாந்தி கூறினார். வீரமணி வீடியோவை சாந்தி என்னிடம் காட்டினார்.. வீடியோவை அவரது வீட்டு டீவியில் ஒளிபரப்பி விட்டு சாந்தி வெளியேறினார்’ என அவர் கூறியிருக்கிறார்.