செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (18:24 IST)

அடேங்கப்பா.. என்னா லாஜிக்! – நிர்மலா சீதாராமனை கலாய்த்த கார்த்திக் சிதம்பரம்

இந்தியாவில் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருவதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய காரணத்தை பகடி செய்துள்ளார் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம்.

மக்களவையில் மீண்டும் பாஜக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 100 நாட்களில் மத்திய அரசு செய்த சாதனைகள் என்ன என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக வெளியிட்டு பேசினார்.

தற்போது நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி போன்ற வரி விதிப்புகளால் தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. முக்கியமாக ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் பலமான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 3 லட்சம் பேருக்கு மேல் வேலையிழந்துள்ள நிலையில், நிறுவனங்களும் தங்கள் வேலை நாட்களை குறைத்து கொண்டு ஃபேக்டரிகளை மூட தொடங்கியுள்ளன. இதற்கு மத்திய அரசின் முறையற்ற வரி நடவடிக்கைகளே காரணம் என எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

அதற்கு விளக்கம் சொன்ன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்து வரும் வீழ்ச்சியானது பிஎஸ்6 வகை எஞ்சின்களை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாலும், குறிப்பிட்ட கால இடைவேளையில் ஏற்படும் தேக்க நிலையாலும்தான். இப்போது வாகனங்கள் வாங்குவதை விட ஊபர் மற்றும் ஓலா போன்றவற்றில் வாகனங்களை புக்கிங் செய்து செல்வதும் ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்.

இதை தொடர்புப்படுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி எம்.பியும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமாகிய கார்த்திக் சிதம்பரம் “அடேங்கப்பா.. என்னா லாஜிக்” என்று கூறியுள்ளார். அதாவது ஜி.எஸ்.டியால் அல்ல ஓலா, ஊபரால்தான் ஆட்டோ மொபைல்ஸ் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்னும் நிர்மலா சீதாராமனின் கூற்றை கிண்டல் செய்யும் விதமாகவே இந்த ட்வீட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.