எந்த வங்கியாக இருந்தால் என்ன?? இனி தபால் நிலையத்திலும் பணம் எடுக்கலாம்: அமலுக்கு வந்தது புதிய சேவை
எந்த வங்கியாக இருந்தாலும், இனி தபால் நிலையங்களிலும் பணம் எடுக்கலாம் என ஒரு புதிய சேவை அமலுக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் வரை தபால் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பயன்படுத்தமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் தபால் நிலைய வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதாவது உங்கள் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே தபால் நிலையங்களில் பணம் எடுக்கமுடியும். கடந்த 1 ஆம் தேதி இந்த சேவை அமலுக்கு வந்தது. தற்போது இந்த சேவையை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் அறிவித்தார்.
மேலும் தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு ரவிஷங்கர் பிரசாத் விருது வழங்கினார். தபால் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கான கோன் பனேகா பாகுபலியின் முதல் இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றது. மேலும் டிஜிட்டல் கிராமம் திட்டத்தில் 3 ஆவது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.