வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (12:40 IST)

கண்ணை கிழித்து கொண்டு மூளைக்குள் சென்ற விசில் – ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண் தலைக்குள் குக்கர் விசில் புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குக்கரில் சமைத்து கொண்டிருந்திருக்கிறார். வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டு வந்து குக்கரை திறந்திருக்கிறார். அதிகபடியான அழுத்தத்தால் திடீரென குக்கரின் மேலுள்ள வெடித்துள்ளது.

வெடித்த பறந்த வேகத்தில் அந்த பெண்ணின் இடது பக்க கண்ணை துளைத்து கொண்டு தலைக்குள் சென்றுவிட்டது. வலியால் துடித்த அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். தலையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குக்கர் விசில் மூளையின் அருகே சிக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்து விசிலை வெளியே எடுத்தனர். அந்த பெண் உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றப்பட்டார். ஆனால் அவரது இடது கண் பலமாக தாக்கப்பட்டதால் கண் பார்வை பறிபோனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.