காங்கிரஸ் கட்சி ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி- பாஜக சென்றதுமே சர்ச்சையில் சிக்கிய குஷ்பு!

Last Updated: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:32 IST)

நடிகை குஷ்பு காங்கிரஸை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என சொன்னதற்கு மாற்று திறனாளிகள் சார்பாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென நேற்று அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். குஷ்புவின் இந்த திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குஷ்புவின் காட்சி மாற்றத்திற்கு அவரது கணவர் சுந்தர் சி தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் குற்றம் சாட்டினார். மேலும் குஷ்புவின் விலகலால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஆறுதல் கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் ’நான் பாஜகவில் சேர தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களே காரணம். எந்த கட்சிக்கும் நாட்டுக்கு நல்லது செய்யும் என்று யோசித்து முடிவெடுங்கள் என்று எல் முருகன் என்னை அழைத்ததால் நான் பாஜகவில் சேர்ந்தேன். காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி’ என்று கூறினார்.

இந்நிலையில் குஷ்புவின் பேச்சு மாற்றுத்திறனாளிகளை சிறுமைப் படுத்துவது போல உள்ளது என மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :