முரளிதரன் படத்தில் நடிப்பதில் தவறு இல்லை: காங்கிரஸ் எம்பி கருத்து!

vijay sethupathi
முரளிதரன் படத்தில் நடிப்பதில் தவறு இல்லை:
siva| Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:34 IST)
விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் திரைப்படத்தையும் தாண்டி தற்போது அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. முதலில் திரை உலக பிரமுகர்கள் ஒரு சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்தனர்

ஆனால் அதன் பின்னர் அரசியல் கட்சித் தலைவர்களான வேல்முருகன், சீமான் உள்பட ஒரு சிலர் அறிக்கையை வெளியிட்டதால் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க பட்டதாகக் கூறப்படும் நிலையில் திடீரென குஷ்பு மற்றும் அண்ணாமலை ஆகியோர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்து முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் எந்த வித தவறும் இல்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
karthi chidambaram
தற்போது பாஜகவை அடுத்து காங்கிரஸ் எபி கார்த்திக் சிதம்பரமும் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து அவர் கூறியதாவது: முத்தையா முரளிதரன் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர். சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரைப்பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொருத்தவரை எந்த தவறும் இல்லை’ என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்
முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படம் தற்போது ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்று விட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை திரைஉலகம் பரபரப்புடன் பார்த்து வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :